ஆபாச சிடியை வெளியிடாமல் இருக்க ரூ. 20 கோடி தருவதாக கூறினார் நித்தியானந்தா-லெனின்

லெனின் கருப்பன், நித்தியானந்தாவிடம் சீடராகவும், டிரைவராகவும் இருந்தவர். இவர்தான் ரஞ்சிதாவுடன், நித்தியானந்தாவுக்கு உள்ள தொடர்புகளை அறிந்து அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் படுக்கை அறையில் இருக்கும் நெருக்கமான காட்சிகளை வீடியோவில் படமாக்கி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.
நேற்று பெங்களூரில் செய்தியாளர்களைச்சந்தித்தார் லெனின் கருப்பன். அப்போது அவர் கூறுகையில்,
நித்யானந்தா தொடர்பான சி.டி.யை நான் வெளியிடும் முன்பும், அதற்கு பிறகும் ரூ.20 கோடி வரை என்னிடம் அவர் பேரம் பேசினார். சி.டி.யை வெளியிட வேண்டாம், எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் என்றும் நித்யானந்தா கேட்டுக் கொண்டார்.
நித்யானந்தா இங்கு சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார். நான் கிறிஸ்தவர் என்று நித்யானந்தா கூறி உள்ளார். நான் இந்து மதத்தை சேர்ந்தவன். எனது தந்தை கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர் என்பதால் தான் எனக்கு லெனின் என்று பெயர் வைத்தார்.
என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனியார் நிறுவனம் மூலம் நித்யானந்தா ராமநகரில் 5 வழக்கு தொடுத்துள்ளார். தற்போது அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், கோர்ட்டில் நான் ஆஜர் ஆகவிடாமல் தடுக்கவும், சாட்சிகளை அழிக்கவும் முயற்சி செய்கிறார். அது நடக்காது.
சமீபகாலமாக நித்யானந்தா எனக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என்றார் லெனின்.
நாசப்படுத்திய நித்தியானந்தா-பெண் என்ஜீனியர் குமுறல்
இதற்கிடையே நித்தியானந்தா தன்னை கற்பழித்து நாசப்படுத்தியதாக கூறியுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். இதுதொடர்பாக ராம் நகர் கோர்ட்டில் அவர் ரகசிய வாக்குமூலம் தரவுள்ளார்.
இதுதொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸாரிடம் புகார் மனு ஒன்றை அவர் அளித்துள்ளார்.
அதில் அப்பெண் கூறியிருப்பதாவது...
"நான் சாமியார் நித்யானந்தா ஆசிரமத்திற்கு கடந்த 2006-ம் ஆண்டு சென்றேன். அங்கு நடந்த பல்வேறு யாகங்களில் கலந்து கொண்டேன். நித்யானந்தாவின் சொற்பொழிவுகளை அடிக்கடி கேட்டேன். இது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. இதனால் அவரது அறைக்கு அடிக்கடி சென்று ஆசி பெறுவேன்.
ஒருநாள் நான் அவரிடம் ஆசி பெற சென்ற போது மதுபானம் வாங்கி வா என்று கூறினார். இதைக் கேட்டதும் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
இதுபற்றி நான் அங்கிருந்த சீடர்களிடம் போய் சொன்னேன். அதற்கு அவர்கள், சுவாமிஜி எது சொன்னாலும் அதை அப்படியே செய். அவரை ஒருபோதும் எதிர்த்து பேசி விடாதே. தெய்வ குற்றமாகி விடும் என்று பயம் காட்டினார்கள்.
கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்தார்
உடனே நான் மைசூர் ரோட்டில் உள்ள மது கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கி வந்து நித்யானந்தாவிடம் கொடுத்தேன்.
சிறிது நேரம் தியானம் செய்த அவர் அந்த மது பாட்டிலை என்னிடம் கொடுத்து குடிக்கச் சொன்னார். எனக்கு பயமாக இருந்தது. எனக்கு மது அருந்தி பழக்கம் இல்லை. என்னை விட்டு விடுங்கள் சாமி என்று கெஞ்சினேன்.
அதற்கு அவர், மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றால் தியாக குணம் அவசியம். அந்த குணத்தை நீ பெற வேண்டும் என்பதற்காகத்தான் குடிக்கச் சொன்னேன். இதில் தவறு எதுவும் இல்லை என்றார்.
கற்பழிப்பது மோட்ச மார்க்காமாம்!
இதனால் நான் மது குடித்தேன். சிறிது நேரத்தில் நான் போதையில் மயங்கியதும் என்னை நித்யானந்தா பலவந்தமாக கற்பழித்தார். இதனால் நான் கதறி அழுதேன். ஏன் என்னை நாசப்படுத்தினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர், இதுதான் மோட்ச மார்க்கம். கவலைப்படாதே என்று கூறினார்.
சிலநாள் கழித்து அவர் என்னையும் மேலும் சில இளம்பெண்களையும் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகருக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை கவர்ச்சியாக உடை உடுத்தும் படி கூறினார். அவரும் காவி உடைக்கு விடை கொடுத்து விட்டு ஜீன்ஸ்-டி-சர்ட் அணிந்து கொண்டார்.
நிர்வாணமாக ஆட வைத்தார்:
என்னை அங்குள்ள “நிர்வாண கிளப்" ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக இருந்தனர். அவர்களைப் போல் எங்களையும் நிர்வாணமாக நின்று ஆட வைத்தார். இது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தாலும் அவர் வற்புறுத்தலால் எதுவும் செய்ய முடியவில்லை. லாஸ்வேகாசில் வைத்தும் அவர் என்னை கொடூரமான முறையில் கற்பழித்தார்.
இதுபற்றி போலீசில் புகார் செய்தால் என் மானம் போய் விடுமே என்று கருதி அவர் மீது புகார் எதுவும் செய்யவில்லை. 2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அவரது பிடியில் சிக்கி தவித்தேன். அவரது சித்ரவதை தொடர்ந்ததால் ஆசிரமத்தை விட்டு வெளியேறினேன் "என்று கூறியுள்ளார்.
விரைவில் அப்பெண் ராம்நகர் கோர்ட்டில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications