தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கெல்லாம் வாய்ப்பே இல்லை-ஸ்டாலின்
தஞ்சாவூர்: தமிழகத்தில் ஆட்சி மாறும் என்று கருதுவோர் ஏமாற்றத்துக்குள்ளாவர். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு கிராமத்தில் 2.53 கோடியில் கட்டப்பட்ட 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரம், அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை ஆகியவற்றை வியாழக்கிழமை திறந்து வைத்தார் ஸ்டாலின்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
திமுக ஆட்சியை விமர்சிக்கும் மாற்றுக் கட்சியினர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதாகவும் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் இதுபோன்ற முற்போக்குத் திட்டங்களைத் தொடங்கக் கூடாது என்று எண்ணியவர்கள்தான் அவர்கள்.
திருமண உதவித் திட்டத்தை, சத்துணவில் முட்டையை, சமத்துவபுரத் திட்டத்தை நிறுத்தியவர்கள் அவர்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் நிச்சயமாக நிறுத்தப்படும். ஆனால், அந்த நிலை வருவதற்கான வாய்ப்பே இல்லை.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் கருணாநிதிதான் ஆட்சிக்கு வருவார். அவரால்தான் 21 லட்சம் குடிசை வீடுகளும் கான்கிரீட் வீடுகளாக மாறப் போகின்றன. அந்த நம்பிக்கையை, நாங்கள் மட்டுமல்ல, மக்களும் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கின்றனர். எனவே, அந்த நம்பிக்கையோடு இந்த ஆட்சிக்கு பக்கபலமாக மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications