காங்.கில் சேர வந்த விஜய்யை வழியில் வந்தவர்கள் கூட்டிப் போய் விட்டனர்-இளங்கோவன்
திருப்பூர்: நடிகர் விஜய்யும், நடிகை குஷ்புவும் காங்கிரஸில் சேரவே வந்தனர். ஆனால் வழியில் வந்தவர்கள் அவர்களை அவர்களது கட்சிக்குக் கூட்டிக் கொண்டு போய் விட்டனர் என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகேயுள்ள செங்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் இளங்கோவன் பேசுகையில்,
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக நின்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இன்று நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.
குஷ்பு, விஜய் போன்ற நடிகர்கள் காங்கிரசில் சேர வந்தார்கள். ஆனால் வழியில் வந்தவர்கள் தங்களுடன் கூட்டிக்கொண்டு சென்று விட்டார்கள். இருந்தாலும் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி பாதுகாப்பாக இருக்கும்.
நெல், கரும்பு, ராகி போன்ற விவசாயத்துக்கு மட்டும்தான் இலவச மின் மோட்டார் தருவதாக கூறுகிறார்கள். அப்படியானால் தக்காளி, காய்கறிகள், பழம், தென்னை விவசாயிகள் என்ன செய்வார்கள்?
கடந்த 31.3.2000-ம் ஆண்டு வரை பதிவு செய்துள்ள 20 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தருகின்றனர். இணைப்பு தருவதற்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான நிபந்தனைகளால் 20 ஆயிரம் பேர் கூட இணைப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரசில் இளைஞர்கள் ஆர்வத்துடன் சேர்ந்து வருகிறார்கள். இதுவரை 14 லட்சம் பேர் இளைஞர் காங்கிரசில் சேர்ந்துள்ளனர். இளைஞர்கள் அனைவரும் காங்கிரசை விரும்பி ஆதரித்து தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் என்றார் இளங்கோவன்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications