தட்ஸ்தமிழ் 'ஆட்டோமொபைல்' பிரிவுக்கு சப்-எடிட்டர்கள் தேவை
தமிழ் இணைய உலகின் முன்னணி தளமான உங்கள் ஒன் தட்ஸ்தமிழ், பல்வேறு பிரிவுகளில் செய்திகளை அளித்து வருகிறது.
தற்போது ஆட்டோமொபைல் செய்திப் பிரிவை விரிவாக்க திட்டமிட்டுள்ளது தட்ஸ்தமிழ்.
ஆட்டோமொபைல் பிரிவில் சப்-எடிட்டர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் குறித்த நல்ல ஞானம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆட்டோமொபைல் துறையில் லேட்டஸ்ட் நிலவரங்கள் குறித்த அப்டுடேட் அறிவைப் பெற்றிருத்தல் அவசியம்.
நல்ல எழுத்தாற்றல், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும் திறன் மிக மிக அவசியம்.
பத்திரிகை/ இன்டர்நெட் மீடியா துறையில் 2 அல்லது 3 ஆண்டு அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
தகுதி உடையவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களையும் பயோ-டேட்டாவையும் [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்புபவர்கள், மெயிலின் சப்ஜெக்ட் லைனில், Automobile News/Copy Writer என்று குறிப்பிட்டு அனுப்பவும்.
பணியிடம்: பெங்களூர்
விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.12.2010


Click it and Unblock the Notifications
