சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கும் இனி பாடநூல்கள்: முதல்வர் கருணாநிதி உத்தரவு
சென்னை: சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் இனி பள்ளிகளில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கும் பாடநூல்கள் வெளியிடப்படும். மேலும், அம்மொழிகளுக்கு முறையே தேர்வு நடத்தப்பட்டு, அந்த மதிப்பெண்கள் மதிப்பெண் பட்டியலில் இடம்பெறும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழகத்தில் 2010-2011 கல்வியாண்டில் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிறுபான்மை மொழிச் சங்கங்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தன, அவற்றை கடந்த 11-ம் தேதி நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலும் வலியுறுத்தப்பட்டன.
அம்மாட்டில் பேசிய கலைஞர் சமச்சீர் கலவி திட்டத்தின் கீழ் சிறுபான்மை மொழிகள் கற்பித்தல் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார்.
அதன்படி பள்ளிகளில் தற்போதுள்ள உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற சிறுபான்மை மொழிகளை கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கப்படும்.
மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழி கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் விரைவில் தயாரிக்கப்படும். மேலும், சிறுபான்மை மொழிகளுக்கு முறையே தேர்வு நடத்தி அந்த மதிப்பெண்களும் மதிப்பெண் பட்டியலில் இடம்பெறும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications