2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொது நலன் வழக்குகளுக்கான மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த வழக்கைத் தொடுத்துள்ளன. இதுதொடர்பாக அவை தாக்கல் செய்துள்ள மனுவில், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ராஜா பதவியில் இருந்தபோது, 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்கிடையே தொலைத் தொடர்புத்துறை நடத்திய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் உரிமங்கள் வழங்கியது ஆகியவற்றில் மிகப் பெரிய அளவில் ஊழலும், முறைகேடுகளும், பாரபட்சமும் காட்டப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்புத்துறை 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்ட இரண்டு செய்தி அறிக்கைகள் மூலம் பெருமளவிலான முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியாகிறது.
மேலும் இந்த ஊழல்கள் நடந்திருப்பது உண்மைதான் என்பதை டெல்லி உயர்நீதிமன்றமும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியும் பதிவு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனவே ராஜா பதவியில் இருந்தபோது நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டையும், அதுதொடர்பாக வழங்கப்பட்ட உரிமங்களையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றுகோரப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications