யாருக்கும் சந்தேகம் வேண்டாம்; மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும்-மு.க.ஸ்டாலின்
சென்னை: மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதி சார்பில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனாம்பேட்டையில் நடந்தது.
அதில் பேசிய ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை மட்டுமல்ல சொல்லாதவைகளையும் நிறைவேற்றியுள்ளோம்.
மற்ற கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் கொடுப்பார்கள். அதன் பிறகு அவர்களை தேட வேண்டிய நிலைதான் வரும். ஆனால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே கட்சி திமுகதான். அதனால் இந்த ஆட்சிக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.
மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. தெம்பு திராணியோடு நாங்கள் மக்களை சந்திக்கிறோம். இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இருப்பதால் இன்முகத்துடன் வரவேற்கிறார்கள்.
கலைஞர் காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருவதை அறிந்து அமெரிக்க அதிபர் ஒபாமா இத்திட்டத்தை நிறைவேற்ற செயல்வடிவம் கொடுத்து வருகிறார்.
கிராமப் புறங்களில் உள்ள குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 3 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது.
மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். கிராமப் பகுதிகளை தொடர்ந்து பேரூராட்சி, அதையடுத்து நகராட்சி, அதன்பின் மாநகராட்சி பகுதிகளில் கான் கிரீட் வீடு திட்டம் நிறைவேற்றப்படும்.
சில கட்சிகள் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர ஆதரவாக செயல்படுகிறார்கள். திமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் சிலர் அரசியல் நடத்த முடியாது என்று எண்ணி திமுகவை அழிக்க புறப்பட்டு இருக்கிறார்கள்.
திமுகவை அழித்த வரலாறு கிடையாது. அதை செய்ய நினைத்தவர்கள் எல்லாம் அனாதையாகி விட்டார்கள்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த நல்ல திட்டங்கள் எல்லாம் நின்று விடும். அதனால் தொடர்ந்து நீங்கள் திமுகவிற்கு ஆதரவு தர வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications