அரசியல்வாதிகளுடன் பழகுவதால் எங்களை நியாயமில்லாமல் குறி வைத்துள்ளனர்-காஸ்பர்

மேலும், சோ. ராமசாமி, சுப்பிரமணியம் சாமி ஆகியோரையும் அவர் கடுமையாக தாக்கி விமர்சித்துள்ளார்.
நேற்று நடந்த சிபிஐ விசாரணை குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார் கஸ்பார். அப்போது அவர் கூறுகையில், எங்களது அமைப்பின் மூலமாக 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரப் பணம் கை மாறியதாக கூறப்படுவதை உறுதியாக மறுக்கிறோம்.
எங்களுக்கும், 2ஜி விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நாங்கள் சுத்தமானவர்கள், எங்களது ஆவணங்கள் சுத்தமானவை. தேவைப்பட்டால் எனது நிறுவன பேலன்ஷீட்டைக் கூட காட்டத் தயாராக உள்ளேன்.
ராஜா சுத்தமானவர் என்று நான் கூறவில்லை. அதேசமயம், தான் சுத்தமானவர் என்பதை நிரூபிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள் என்றுதான் கூறுகிறேன்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது ராஜா அதற்கு ரூ. 4 லட்சம் பணம் கொடுத்தார். அப்போது அவர் தொலைத் தொடர்பு அமைச்சர் இல்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
கனிமொழிதான் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் மூளை. ஏழை எளிய கலைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது. கனிமொழியின் கடும் உழைப்பினால் கிராமப்புறங்களோடு நின்று போயிருந்த நாட்டுப்புறக் கலைகளை சென்னை மக்களும் அறிந்து கொள்ள முடிந்தது.
கனிமொழியுடனான நட்பை, தொடர்பை நாங்கள் மதிக்கிறோம். அவர் நிச்சயம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்குவார்.
சிபிஐ விசாரணைக்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம். அரசியல்வாதிகளுடன் நாங்கள் தொடர்பு வைத்திருப்பதால்தான் குறி வைக்கப்பட்டுள்ளோம். இது நியாயமே இல்லை என்றார் காஸ்பர்.
தனது பேட்டியின்போது ஆங்கில மீடியாக்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக் கூடாது என்று கூறிய கஸ்பார், சோ. ராமசாமி, சுப்பிரமணியம் சாமி ஆகியோரையும் படு காட்டமாக விமர்சித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications