For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலையில் விழுந்து நொறுங்கிய நேபாள விமானம்-22 பேர் பலி

Google Oneindia Tamil News

காத்மாண்டு: நேற்று நேபாள நாட்டின் கோடங் மாவட்டத்தின் லேமிதண்டா விமான நிலையத்தில் இருந்து தலைநகர் காத்மாண்டுவுக்கு அந்த தனியார் விமானம் புறப்பட்டுச் சென்ற சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

அதில் ஒரு அமெரிக்கர் உள்பட 19 பயணிகளும், இரு விமானிகளும் ஒரு சிப்பந்தியும் இருந்தனர்.

இதையடுத்து விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. இன்று காலை அந்த விமானம் கிழக்கு நேபாள மலைப் பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது. இதுவரை 20 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

விமானம் விபத்துக்குள்ளானது ஏன் என்று தெரியவில்லை. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த விமானம் கனடாவில் தயாரிக்கப்பட்டதாகும்

English summary
A major flight accident occurred in eastern Nepal on Wednesday, Dec 15, when a small passenger plane crashed in the mountainous terrain adjacent to the rocky airstrip. According to sources all 22 passengers on board were killed in the tragedy. The reason for the crash remains unknown.
 The Twin Otter plane carrying 19 passengers including one American and 3 crew members departed from a small airstrip from Lamidanda to the east of Kathmandu on Wednesday afternoon. It crashed into a versant shortly after take-off.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X