கடன்-வட்டி ரூ.42,000 கோடி...விவிஐபி விமானங்களுக்கு ரூ.800 கோடி: 'விளங்குமா' ஏர் இந்தியா?

-பொதுத்துறை நிறுவனங்களை இன்னமும் நேசிப்போரிடமிருந்து எழும் பெருமூச்சு கலந்த கேள்வி இது.
ஏர் இந்தியாவுக்கு இப்போதுள்ள கடனின் அளவு ரூ 40000 கோடி. இதற்கு வட்டிகள் உள்ளிட்ட சர்வீஸ் சார்ஜ் ரூ 2000 கோடி!
பொதுவாக விமான நிறுவனங்களின் கடனுக்கு நிகரான பங்கு முதல் மதிப்பு 5:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். அதாவது ரூ 5000 கோடி கடன் இருந்தால், ரூ 1000 கோடி பங்கு முதல் இருக்க வேண்டும். ஆனால் ஏர் இந்தியாவின் கடன் ரூ 40000 கோடியாகவும், பங்கு முதல் மதிப்பு ரூ 945 கோடியாகவும் உள்ளது. அதாவது 40:1.
இதன் விளைவு மேற்கொண்டு இந்த நிறுவனத்துக்கு விமானம் சப்ளை செய்யக் கூட சர்வதேச நிறுவனங்கள் தயங்குகின்றன. மேற்கொண்டு கடன் தர பொதுத் துறை வங்கிகள் மறுக்கின்றன. இதனால் அரசின் ஆதரவுக் கடிதம் கொண்டு வருமாறு ரிசர்வ் வங்கி ஏர் இந்தியாவுக்கு அறிவுறுத்தும் அளவுக்கு நிலைமை கைமீறிப் போய்விட்டது.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்களுக்கு சிறப்பு விமானம் இயக்குவதற்காக மட்டுமே ரூ 800 கோடிக்குமேல் தேவைப்படுகிறதாம் ஏர் இந்தியாவுக்கு. இந்தத் தொகையை முன்கூட்டியே தந்து உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளது நிதி அமைச்சகத்திடம்!
ஏற்கெனவே ரூ 2000 கோடி அளவுக்கு பங்கு முதலை செலுத்தியது மத்திய அரசு. இதில் ரூ 800 கோடி கடந்த நிதி ஆண்டு தரப்பட்டது. ரூ 1200 கோடி இந்த மாதம் தரப்பட உள்ளது.
இப்போது அடுத்த கட்ட தவணையாக மேலும் ரூ 2000 கோடியை அடுத்த நிதி ஆண்டுக்குள் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல்.
மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவை நேற்று சந்தித்த பின் இந்த வேண்டுகோளை அவர் வெளியிட்டார்.
ஒரு பக்கம் கடன் சுமை.. மறுபக்கம் நஷ்டம், அரசியல் விவிஐபிக்களுக்களின் கணக்குவழக்கற்ற ஓசி சவாரிகள் என மீள முடியாத, மோசமான நிலையில் தத்தளிக்கிறார் இந்த 'மஹாராஜா'!
குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகள்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications