நில ஒதுக்கீடு புகார்: விளக்கம் கேட்டு எதியூரப்பாவுக்கு ஆளுநர் கடிதம்-மீண்டும் மோதல்

கர்நாடக முதல்வர் எதியூரப்பா பல கோடி மதிப்புள்ள அரசு நிலங்களை குடும்பத்தோடு ஸ்வாஹா செய்துவிட்டார் என்று எதிர்கட்சிகள் புகார் தெரிவித்தன. இது குறித்து லோக் அயுக்தா விசாரணை நடத்தி வருகிறது.
இது குறித்து விசாரிக்க அரசு ஓய்வு பெற்ற நீதிபதி பத்மராஜ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. அரசின் இந்த நடவடிக்கைக்கு க்ரநாடக ஆளுநர் பரத்வாஜ் கடும் கண்டனம் தெரிவித்தார். நில ஒதுக்கீடு முறைகேடு குறித்து லோக் அயுக்தா தான் விசாரிக்க வேண்டும், மக்களை குழப்புவதற்காகத்தான் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஆனால் தற்போது நில ஒதுக்கீடு புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு எதியூரப்பாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோரின் சுரங்கத் தொழில் குறி்த்தும் விவரம் கேட்டுள்ளார்.
கர்நாடகத்தில் மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்து தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் ஆளுநர் எதியூரப்பாவின் ஊழல் புகார் குறித்து விளக்கம் கேட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எதியூரப்பாவுக்கும், ஆளுநருக்கும் மீண்டும் மோதல் ஏற்படும் நிலை உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications