சென்னையில் மட்டும் 1 கோடிக்கும் அதிகமான செல்போன் சந்தாதாரர்கள்!!
சென்னை: சென்னை மாநாகரில் மட்டும் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் செல்போன், இண்டர் நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை நகரில் மட்டும் செல்போன் பயன்படுத்து வோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டிவிட்டது. தற்போது செல்போன்களிலும் இண்டர்நெட் இணைப்பு வழங்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 4 லட்சம் பேர் செல்போனில் இண்டர்நெட் பார்ப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2 லட்சம் மாணவ- மாணவிகள் சென்னை நகரில் உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கிறார்கள். இதில் 20 சதவீதம் பேர் செல்போன் மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.
இதுதவிர கம்ப்யூட்டர் மையங்கள், வீடுகளில் உள்ள இண்டர்நெட் இணைப்புகள் மூலமும் மாணவ- மாணவிகள் இண்டர்நெட் பார்க்கிறார்கள். சென்னையில் மட்டும் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ- மாணவிகள் இண்டர் நெட்டை பயன்படுத்தி பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கிக் கொள்கிறார்கள். இதுதவிர பாடங்களை பதிவு செய்தல், பொழுதுபோக்கு அம்சங்கள், வீடியோகேம் விளையாடவும் இன்டர்நெட் பெரிதும் பயன்படுகிறது.
இன்றைய சூழலில் பொழுதுபோக்குத் துறையில், இன்டர்நெட் என்பது ஒரு மாற்று பொழுதுபோக்காகவே மாறிவிட்டது.
13 முதல் 17 வயது வரை உள்ளவர்கள் வயது வந்தோர் மட்டும் பார்க்க கூடிய சைட்களை பயன்படுத்தி செக்ஸ் தளங்களைப் பார்க்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. நிறையப் பேர் புதிய படங்களை இந்த இணையங்களில்தான் டவுன்லோடு செய்து பார்க்கிறார்கள். சமீபத்தில் வெளியான ரஜினியின் எந்திரன் படத்துக்கு திருட்டு விசிடியை விட, இந்த இணையவழி ஒளிபரப்புதான் பெரும் சவாலாக அமைந்தது.
செல்போனில் இண்டர் நெட் பயன்படுத்துகிறவர்கள் வரிசையில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. அங்கு 10 சதவீதம் பேர் பயன்படுத்துகிறார்கள். மும்பையில் 6.4 சதவீதம் பேர் செல்போனில் இண்டர்நெட் பார்க்கிறார்கள்.
சென்னைக்கு இதில் 3-வது இடம் கிடைத்துள்ளது. இங்கு செல்போன் வைத்திருப்பவர்களில் 4 சதவீதம் பேர் செல்போன் இண்டர்நெட் வசதியை பயன்படுத்தி வருகிறார்கள். 20 சதவீதம் பேர் ஆன்லைன் வர்த்தகம் செய்கிறார்கள். இதுதவிர செல்போனில் எப்.எம்., மெமரி கார்டில் பதிவு செய்த பாடல்கள் கேட்போர் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துள்ளது.
செல்போன் இணைப்புகளைப் பொறுத்தவரை பிஎஸ்என்எல் கடந்த அக்டோபரில் மட்டும் 2.5 மில்லியன் இணைப்புகளைத் தந்துள்ளது. நகர அளவில் அதிக பிஎஸ்என்எல் இணைப்புகள் பெற்றிருப்பது சென்னைதான் என்பது முக்கியமானது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications