சீன அதிபர் ஜின்டாவோவின் முழுப் பொறுப்பில் திபெத், தலாய் லாமா விவகாரம்: விக்கிலீக்ஸ்
பெர்லின்: சீனாவில் எப்படியோ, ஆனால், அரசை நிர்வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவில் உண்மையான ஜனநாயகம் நிலவுவதாக கூறியுள்ள விக்கிலீக்ஸ், அனைத்து விவகாரங்களையும் இந்த பொலிட்பீரோதான் தீர்மானிக்கிறது. அதேசமயம், திபெத் மற்றும் தலாய் லாமா குறித்த விவகாரத்தை முழுமையாக கையாளுவது அதிபர் ஹூ ஜின்டாவோதான் என்றும் விக்கிலீக்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறி்த்து சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அனுப்பி வைத்த ரகசிய கடிதத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஜெர்மன் நாட்டு பத்திரிக்கையான டெர் ஸ்பீஜெல்லில் வெளியாகியுள்ள செய்தி...
சீன அரசை நிர்வகிப்பது, அதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோதான். இதில் 24 ஆண்கள் மற்றும் 1 பெண் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
சீனாவில் ஜனநாயகம் இருக்கிறதோ இல்லையோ. இந்த பொலிட்பீரோவில் முழுமையான ஜனநாயகம் விளங்குகிறது. மிக முக்கியப் பிரச்சினைகள் பொலிட்பீரோவில் வைத்துதான் முடிவெடுக்கப்படுகிறது. அனைத்து உறுப்பினர்களும் சம்மதித்தால்தான் எந்த ஒரு பிரச்சினைக்கும் ஒப்புதல் தரப்படுகிறது.
ஒரு உறுப்பினர் மாறுபட்ட கருத்தை தெரிவித்தாலும் கூட அனுமதி கிடைக்காது. ஒவ்வொரு உறுப்பினருக்கும் வீட்டோ அதிகாரம் கொடுத்து வைத்துள்ளனர். எனவே எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஒட்டுமொத்த பொலிட்பீரோவின் சம்மதமும் அவசியமாகிறது.
சாதாரணப் பிரச்சினைகளைக் கவனிக்க 9 பேர் கொண்ட ஒரு குழுவை வைத்துள்ளனர். அது அந்தப் பிரச்சினைகளைக் கவனி்த்துக் கொள்கிறது.
பொலிட்பீரோவில் எடுக்கப்படும் முடிவு உள்ளிட்டவை, யாருக்கு அதிகாரம் உள்ளது, யார் யார் எந்தக் கருத்தை தெரிவித்தனர், யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பது யாருக்குமே தெரியாது. ஆளும் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கு மட்டுமே இது தெரியும்.
அனைத்துப் பிரச்சினைகளையும் பொலிட்பீரோ கவனித்தாலும் கூட திபெத் மற்றும் தலாய் லாமா குறித்த பிரச்சினையை அதிபர் ஹூ மட்டுமே கவனிக்கிறார். தலாய் லாமாவை மிகக் கடுமையாக வெறுப்பவர் ஹூ. அவரை ஒரு துரோகியாக ஹூ கருதுகிறார். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் யாரேனும் தலாய் லாமா குறித்து பரிதாபப்பட்டாலும் கூட அவர்களுக்கு வேலை காலியாகி விடும். அந்த அளவுக்கு தலாய்லாமாவை கடுமையாக வெறுப்பவர் ஹூ என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications