மருத்துவமனையில் உண்ணாவிரததத்தை தொடருகிறார் நாயுடு-உடல் நலம் மோசமடைகிறது
ஹைதராபாத்: விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் இருந்து வரும் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக அவரது டாக்டர் சோமராஜு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில அரசு விவசாயிளுக்கு மழை வெள்ள நிவாரண நிதியை அதிகரிக்க வேண்டும் என்று கோரி கடந்த 4 நாட்களாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார் நாயுடு.
அவரது உடல்நலம் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீஸார் கட்டாயப்படுத்தி நிஜாம் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கும் அவர் தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். இன்று 5வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நாயுடுவின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக அவரது தனிப்பட்ட டாக்டர் சோமராஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாயுடுவின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது.
அவர் திரவ உணவையோ அல்லது திட உணவையோ எடுத்துக் கொள்ள மறுத்து வருகிறார். தண்ணீர் கூட குடிக்க மறுக்கிறார். அவரது உண்ணாவிரதம் தொடர்ந்தால் உடல் நலம் மேலும் மோசமடையும். மிகவும் பலவீனமாக காணப்படுகிறார் நாயுடு என்றார்.
இதற்கிடையே, நிஜாம் மருத்துவமனையைச் சேர்ந்த 6 டாக்டர்கள் கொண்ட குழு நாயுடுவின் உடல் நிலையை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.
தற்போது நாயுடுவின் ரத்த சர்க்கரை அளவு சற்று அதிகரித்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, நாயுடுவை இன்று சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சித் தலைவர்கள் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications