இலங்கை தமிழர்கள்: கவலைப்படுகிறாராம் ராகுல் காந்தி!

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்த தமிழகத்தில் இரண்டு நாள் பயணமாக வந்துள்ள ராகுல், இன்று காலை சென்னை ஹோட்டல் தாஜ் கன்னிமாராவில் 120 'அறிவுஜீவிகளை' (intellectuals) சந்தித்தார். இதில் ஊடக, சட்ட, திரையுலக பிரமுகர்கள் (ராம நாராயணன், ஆர்.கே.செல்வமணி, நாசர், நடிகை ராதாவின் மகள் ஆகியோர் உள்பட) கலந்து கொண்டனர்.
அப்போது அவரிடம் இலங்கை விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில், இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய வசதிகளை செய்து தராதது கவலையளிப்பதாக உள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசில் உரியவர்களிடம் பேசி, இலங்கை அரசை தொடர்பு கொண்டு, தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யப்படும்.
அறிவுஜீவிகளும் புத்திசாலிகளும் நேரடியாக அரசியலுக்கு வர மறுப்பது கவலையளிக்கிறது. அவர்கள் நேரடி அரசியலில் பங்கேற்று நாட்டுக்கு வழி காட்ட வேண்டும். அதிகளவில் இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டு வர நான் முயற்சித்து வருகிறேன் என்றார்.
ராகுலுக்கு கருப்புக் கொடி-சிவசேனாவினர் கைது:
இந் நிலையில் ராகுலின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் கருப்புக் கொடி போராட்டம் நடத்திய சிவசேனா கட்சியினர் கைது செய்யப்பட்டனர். காவி பயங்கரவாதம் குறித்த ராகுலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் அவரது உருவ பொம்மையையும் எரிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்துவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications