கட்சியைக் கலைக்கவும் தயார்: ராமதாஸ் சொல்கிறார்
சேலம்: பாமகவை விட நல்ல கொள்கைகள் கொண்ட வேறு கட்சி இருந்தால், நான் பாமகவை கலைத்து விட்டு, அந்தக் கட்சியில் சேரத் தயார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி தொகுதி பாமக இளைஞர்கள், இளம்பெண்கள் பயிற்சி முகாம் கூட்டம் நடந்தது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில்,
தமிழகத்தில் கொள்கை பிடிப்புள்ள ஒரே கட்சி பாமக தான். இந்தக் கட்சியில் தான் யாரும் மது குடிக்கக் கூடாது, அனைவருக்கும் இலவச கல்வி, அனைவருக்கும் கட்டாயக் கல்வி உள்ளிட்ட கொள்கைகள் முன்னிறுத்தப்பட்டுள்ளன. பாமக அளவுக்கு கொள்கை பிடிப்புள்ள கட்சி தமிழகத்தில் வேறு எதுவும் இல்லை.
அவ்வாறு, பாமகவை விட நல்ல கொள்கை உள்ள கட்சி வேறு உள்ளது என்று யாராவது கூறினால், பாமகவைக் கலைத்து விட்டு, அந்த கட்சியில் சேர நான் தயார் என்றார்.
முன்னதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி பேசுகையி்ல்,
இது மற்ற கட்சிகள் நடத்துவது போல் மாநாடோ, கூட்டமோ அல்ல. இளைஞர்களுக்கான பயிற்சி முகாம். நீங்கள் வீட்டுக்கு சென்று அருகில் உள்ள வீட்டிலும், சொந்தக்காரர்களிடமும் பேசி, அவர்களை பாமகவுக்கு கூட்டி வரவேண்டும். அவ்வாறு செய்தால், நாம் யார் தயவும் இல்லாமல் வெற்றி பெறமுடியும்.
இது அனைத்து சாதி மக்களுக்காகவும் பாடுபடும் கட்சி.நான் மத்திய அமைச்சராக இருந்த போதுதான் 108 ஆம்புலன்ஸ் திட்டம், கிராமப்புற சுகாதார திட்டம், சேலத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications