உண்ணாவிரதத்தை கைவிட நாயுடுவுக்கு கருணாநிதி தந்தி: 'நாயுடு சேவை நாட்டுக்குத் தேவை'
சென்னை: கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சந்திரபாபு நாயுடுக்கு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி தந்தி அனுப்பியுள்ளார்.
ஆந்திராவில் இயற்கை சீற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
நேற்று அவர் நிலைமை மோசம் அடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அங்கும் உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்கிறார்.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு உண்ணாவிரதத்தை கைவிடக் கோரி தமிழக முதல்வர் நேற்றிரவு தந்தி அனுப்பினார்.
அந்த தந்தியில் கூறப்பட்டிருப்பதாவது,
உங்களின் சேவை இந்தியாவுக்கு குறி்ப்பாக ஆந்திர மக்களுக்கு அதிகம் தேவை. அதனால் நாட்டு நலனை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications