நீரா ராடியாவுடன் அத்வானிக்கு தொடர்பா? பாஜக மறுப்பு!

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிசேக் சிங்வி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது பா.ஜ.க. தலைவர் அத்வானிக்கும் தரகர் நீரா ராடியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறினார்.
நீரா ராடியா நடத்தும் அறக்கட்டளைக்கு டெல்லி வசந்த்கஞ்ச் பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் அத்வானி கலந்து கொண்டார். அப்போது நீரா ராடியாவை அத்வானி பாராட்டினார் என்றும் அபிசேக் சிங்வி குற்றம் சாட்டினார்.
பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில்தான் சுவிஸ் வங்கியில் ராடியா கணக்கு தொடங்கினார். அவருக்கு அந்த அனுமதியை கொடுத்தது ஏன் என்றும் அபிசேக் சிங்வி கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் கூறுகையில், சுவிஸ் வங்கி கணக்கில் நீரா ராடியா மட்டும்தான் பணம் போட்டுள்ளாரா? அல்லது அவருடன் சேர்ந்து பா.ஜ.க. தலைவர்களும் பணம் போட்டுள்ளார்களா? இதற்கு பா.ஜ.க. தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
தரகர் நீரா ராடியா பல்வேறு தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தது, அவரது தொலைபேசி உரையாடல்கள் பதிவு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்கலுக்குள்ளாகியுள்ள காங்கிரஸ், பழியை பாஜக மீது போட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
பாஜக மறுப்பு
இந்த நிலையில் அத்வானிக்கும், நீரா ராடியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் தகவல்களை பா.ஜ.க. மறுத்துள்ளது. நீரா ராடியா கலந்து கொண்ட எந்த விழாவிலும் அத்வானி கலந்து கொண்டதில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நீரா ராடியாவை அத்வானி ஒருபோதும் சந்தித்ததே இல்லை என்றும் பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications