லலித் மோடிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைக்கு தடை!
Subscribe to Oneindia Tamil
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் ஆணையர் லலித் மோடிக்கு எதிரான பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை குழுவின் செயல்பாடுகளுக்கு ஜனவரி 10-ம் தேதி வரை மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இத்தகவலை லலித் மோடியின் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒழுங்கு நடவடிக்கை குழுவை பிசிசிஐ ஆண்டுக் கூட்டத்தில் மட்டுமே நியமிக்க முடியும் என்ற விதிமுறை உள்ள நிலையில், பிசிசிஐ அமைப்பு அதற்கு மாறாக செயல்பட்டுள்ளது என்று ராம் ஜெத்மலானி தனது வாதத்தில் எடுத்துக் கூறினார்.
இதையடுத்து, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜே. கதாவாலா, பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை குழுவின் செயல்பாடுகளுக்கு ஜனவரி 10-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications