பாகிஸ்தான் குண்டு வெடிப்பு: 45 பேர் பலி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 45 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பஜாவோர் மாகாணம் உள்ளது. மலைகளால் சூழப்பட்ட இது தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி. அங்குள்ள ஹார் என்ற இடத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வினியோக மையம் உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை உணவு பொருள் வினியோகம் நடந்தது. அவற்றை பெறுவதற்காக ஏராளமானவர்கள் அங்கு கூடியிருந்தனர். அப்போது அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இதனால் அப்பகுதி அதிர்ந்து தீப்பிடித்து எரிந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் அலறியடித்தபடி அங்கு மிங்கும் ஓடினார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அங்கு கூடியிருந்த 45 பேர் உடல் சிதறி பலியானார்கள். 100 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனை வரும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குலை தற்கொலை தீவிரவாதிகள் நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. ஒரு பெண் மூலம் இதை அவர்கள் நிகழ்த்தியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இது போன்ற தாக்குதலை தலிபான் தீவிரவாதிகள்தான் நடத்துவார்கள்.
ஆனால் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications