நெல்லை-வெங்காயத்தை தொடர்ந்து தக்காளி விலையும் கடும் உயர்வு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இதில் தக்காளி, வெங்காயம் உள்பட பல செடிகள் அழுகி சேதம் அடைந்தன. இதனால் விளைச்சல் குறைந்து விட்டது. இதில் வெங்காயம் விலை கிடு கிடு வென உயர்ந்து கிலோ ரூ.100 வரை சில்லரை கடைகளில் விற்கப்பட்டது.
மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த பிறகு மளமளவென வெங்காய விலை குறைய தொடங்கியது. இதனால் வெங்காயம் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. ரூ.40 ரூபாய்க்கு விற்ற வெங்காயம் இன்று ரூ.35க்கு விற்கப்பட்டது.
ஆங்காங்கே உள்ள சில்லரை கடைகளில் அவர்கள் விருப்பபடி விலை வைத்து விற்கிறார்கள். இந்த நிலையில், வெங்காய விலையில் இருந்து மீண்ட மக்களுக்கு இப்போது தக்காளி விலை உயர்வு அதிரிச்சியை கொடுத்துள்ளது.
கடந்த வாரம் கிலோ ரூ.20க்கு விற்ற தக்காளி ரூ.2, 3 கூடி கொண்டே வந்தது. 2 நாட்களுக்கு முன்பு ரூ.30ல் இருந்து ரூ.34 வரை விற்ற தக்காளி நேற்று சில்லரை கடைகளில் கிலோ ரூ.40க்கு விற்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே தக்காளிக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் ரோட்டோரத்தில் குவித்து மாடுகளுக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications