For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

50 சதவீத லாபம் குவித்த சீன அரசு நிறுவனங்கள்!

By Chakra
Google Oneindia Tamil News

Chinese Iron Industry
பெய்ஜிங்: சீனாவின் பெரிய நிறுவனங்கள் அனைத்துமே 50 சதவீதத்துக்கும் அதிகமான லாபம் ஈட்டி சாதனைப் படைத்துள்ளன. முக்கியமாக அரசு நிறுவனங்களின் செயல்பாடும், லாப ஈட்டலும் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

2010-ம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 39 பெரிய நிறுவனங்கள் 5 பில்லியன் யுவான் (754 மில்லியன் டாலர்) லாபமாக ஈட்டியுள்ளதாக சீன தேசிய புள்ளியியல் நிறுவனம் அறிவித்துள்ளது.

சீன அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு இணையாக, தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் லாபம் சம்பாதித்துள்ளன. 50 சதவீதத்துக்கும் அதிகமாக லாபம் கிடைத்துள்ளது இந்த நிறுவனங்களுக்கு.

'இது சீனாவின் ஆரோக்கியமான பொருளாதார சூழலைக் காட்டுவதாக உள்ளது' என சர்வதேச நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

இந்த புள்ளிவிவரம் தரும் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், நிறுவனனங்களின் வளர்ச்சி குறைவாக இருந்தாலும் லாபத்தின் அளவு அபரிமிதமாக உள்ளது.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள லாப அளவில் 3.9 ட்ரில்லியன் யுவான், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களால் ஈட்டப்பட்டுள்ளது மிக முக்கியமான அம்சம். தனியார் நிறுவனங்கள் 1.1 ட்ரில்லியன் யுவான் ஈட்டியுள்ளன.

English summary
Major Chinese companies have clocked astounding year on year profits of nearly 50% in the first 11 months of 2010, the National Bureau of Statistics said on Monday while reporting the performance of 39 companies with annual revenue exceeding five billion yuan ($754 million). Foreign and private companies did almost as well as state-owned firms, it said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X