புனே பந்தில் 8 பஸ்களை நாசமாக்கிய சிவசேனை தொண்டர்கள்!
Subscribe to Oneindia Tamil
புனே: சத்ரபதி சிவாஜியின் வழிகாட்டியாகக் கருதப்படும் தாதோஜி கொண்டதேவின் சிலையை அகற்றியதைக் கண்டித்து சிவசேனை மற்றும் பாஜ கட்சியினர் புனேவில் இன்று நடத்திய பந்தின்போது அக்கட்சிகளைச் சேர்ந்தோர் 8 பஸ்களை சேதப்படுத்தினர்.
புனே நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தாதோஜியின் சிலை லால்மஹாலில் இருந்து நேற்று அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பந்த் நடத்த சிவசேனையும், பாஜகவும் அழைப்பு விடுத்திருந்தன. பந்த்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவசேனைத் தொண்டர்கள் சிலர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மத்திய ரயில்வேயின் மும்பை-புனே பகுதியில் உள்ள லோனாவாலாவில் ரயில் போக்குவரத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சீர்குலைக்க முயன்றதாக தகவல்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications