மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்து செய்தது நானே: ஜெ
சென்னை: அதிமுக செயற் குழு- பொதுக் குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
சென்னையையடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் மாலை 3.45 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்துக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். சசிகலா உள்ளிட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கும் இக் கூட்டத்தில் சட்டசபை தேர்தலை சந்திப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
மேலும் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன.
அதிமுக பொதுக் குழுவில் 968 பேர் உள்ளனர். செயற் குழுவில் சுமார் 150 பேர் உள்ளனர். இவர்கள் தவிர முன்னாள் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்களும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
யார் ஆட்சியில் மதமாற்றத் தடைச் சட்டம் ரத்து?:
இந் நிலையி்ல் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மை இன மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைப் பற்றி மக்கள் மத்தியில், குறிப்பாக சிறுபான்மை இன மக்களிடையே தவறான பிரசாரத்தை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் 18.5.2004 அன்று எனது தலைமையிலான அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் வாயிலாக அறவே ரத்து செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.
நடைமுறையில் உள்ள ஒரு சட்டம், ஓர் அவசரச் சட்டத்தின் வாயிலாக ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த அவசரச் சட்டத்திற்கு சட்டப்பேரவையின் அனுமதி பெறப்படாவிட்டாலும் கூட, அவசரச் சட்டத்தின் மூலம் ரத்தான சட்டம் தொடர்ந்து ரத்தானதாகவே இருக்கும், மீண்டும் உயிர் பெறாது. இதுதான் சட்ட நிலைப்பாடு.
சட்டப்பேரவைக்கு கொண்டு வந்தால் தான் ரத்தாகும் என்றில்லை. இது 1985ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஏற்கெனவே நான் முதல்வராக இருந்தபோது, 21.5.2005 அன்று தெளிவுபட எனது அறிக்கையின் வாயிலாகவும், 2006 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும், அதற்குப் பின்பும் பல சூழ்நிலைகளில் தெரிவித்திருக்கிறேன்.
2006ல் கருணாநிதி ஆட்சி அமைத்த பிறகு இந்த அவசரச் சட்டத்தை மீண்டும் சட்டப்பேரவைக்கு கொண்டு வந்து அதனை அவரது அரசு தான் ரத்து செய்தது என்று கூறுவது, ஏற்கனவே ஒருவரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட ஒரு பிரேதத்தை தோண்டி வெளியே எடுத்து, மீண்டும் அதில் வேலை பாய்ச்சி "நான் தான் கொன்றேன்" என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை 2006லேயே தெளிவுபடுத்தி இருந்தேன். அதையே மீண்டும் கூறுகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
தானே ரத்து செய்த இந்தச் சட்டத்தை, முதலில் என்ன காரணத்துக்காக கொண்டு வந்தார் என்பதையும், பின்னர் எதற்காக தானே கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்தார் என்பதையும் ஜெயலலிதா விளக்கினால் நல்லது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications