திமுக, திரினமூல் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்-காங். திட்டவட்டம்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில், இரு மாநிலங்களிலும் கூட்டணி தொடரும். நாங்கள் கூட்டணிக் கட்சிகளை ஒருபோதும் கைவிட மாட்டோம், தூக்கிப் போட மாட்டோம்.
பீகாரில் கட்சி முதலிலிருந்து அனைத்தையும் தொடங்க வேண்டியுள்ளது. அதை நாங்கள் செய்வோம். நாங்கள் தோல்வி அடைந்ததை மறுக்கவில்லை, ஏற்றுக் கொள்கிறோம்.
ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரி்வார் அமைப்புகளை கொள்கை ரீதியாக வெல்ல வேண்டும் என்பது காங்கிரஸின் கருத்தாகும். இந்த அமைப்புகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். இந்த அமைப்புகளைத் தடை செய்வதால் அடிப்படைவாதத்தையும், மதவாதத்தையும் தடுத்து விட முடியாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications