சிபிஐ விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பைக் கொடுத்தேன்-ராசா
Subscribe to Oneindia Tamil

சிபிஐ விசாரணைக்குப் பின்னர் நேற்று சென்னை திரும்பினார் ராசா. அப்போது விமான நிலையத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்கள், சிபிஐ விசாரணை குறித்து கேட்டனர்.
அதற்கு ராசா பதிலளிக்கையில், சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில்களை கூறினேன். சி.பி.ஐ. போன்ற எந்த ஒரு விசாரணை அமைப்பின் விசாரணைக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பேன்.
விசாரணையில் என்ன கேட்டார்கள், நான் என்ன பதிலளித்தேன் என்பது குறித்து சொல்ல முடியாது என்றார்.
மறுபடியும் உங்களை விசாரிப்பார்களா என்ற கேள்விக்கு மேற்கொண்டு சொல்ல எதுவும் இல்லை என்று கூறி விட்டு கிளம்பினார் ராசா.












Click it and Unblock the Notifications