For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிலோ ரூ 60... தொடர்ந்து உச்சத்தில் தக்காளி விலை!

Google Oneindia Tamil News

தக்காளி விலை தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளது. இன்றைய நிலவரப்படி கிலோ ரூ 60க்கு விற்கிறது தக்காளி.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக காய்கறி விலை உயர்ந்து கொண்டே செல் கிறது. மாநிலம் முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக காய்கறி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டதால் உற்பத்தி குறைந்து விட்டது.

இன்றைய தேதிக்கு சைவத்தை அசைவமே பரவாயில்லை என்று நடுத்தர மக்கள் சலித்துக் கொள்ளும் அளவுக்கு காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

இதனால் வெங்காயம், தக்காளி விலை மீண்டும் உயர்ந்து விட்டது. மற்ற காய்கறிகளின் விலையும் அதிகமாகவே உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் 13 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.550 முதல் ரூ.600 வரை விற்கப்பட்டது.

இதனால் சில்லறை கடைகளில் கிலோ ரூ.60 வரை தக்காளி விற்கப்படுகிறது. பெங்களூர் தக்காளி ரூ.55-க்கு விற்பனையாகிறது.

இதேபோல வெங்காயமும் விலை குறையாமல் கிலோ ரூ.55 வரை விற்கப்படுகிறது. சிறிய வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப் படுகிறது.

கத்தரிக்காய் கிலோ ரூ 30, வெண்டை கிலோ ரூ 50, பீன்ஸ் ரூ 50, மாங்காய் ரூ 50 என மற்ற காய்கறிகளின் விலையும் தக்காளி - வெங்காயத்துக்கு சளைக்காமல் உயர்ந்துள்ளன.

English summary
Vegetable price all over the state is increasing continuously. According to the latest data, Tomatto and Onion prices not come down and still in high. Today"s tomatto price is Rs 60 per kg.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X