பெங்களூர் நீதிமன்றத்தில் லெனின் கருப்பன் மீது ரஞ்சிதா வழக்கு
பெங்களூர்: கர்நாடக நீதிமன்றத்தில் நித்யானந்தாவின் முன்னாள் சீடரான லெனின் கருப்பன் மீது நடிகை ரஞ்சிதா திடீரென வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா இருப்பது போன்ற படுக்கை அறைக் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து நித்யானந்தாவின் முன்னாள் சீடரான லெனின் கருப்பன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி, நித்யானந்தா- ரஞ்சிதா ஆபாச வீடியோவை தானே எடுத்ததாகவும், நித்யானந்தா தனது பீடத்திற்கு வரும் பல பெண்களிடம் செக்ஸ் தொடர்பு வைத்துள்ளதாகவும், காவி உடை அணிந்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் புகார் தந்தார்.
இதையடுத்து சென்னை போலீசார் நித்யானந்தா மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு பெங்களூர் போலீசுக்கு மாற்றப்பட்டது.
இந் நிலையில் இந்த விவகாரத்தில் நடிகை ரஞ்சிதா நேற்று முதன்முதலாக கர்நாடக நீதிமனறத்தில் ஆஜரானார். பெங்களூர் அருகே ராம்நகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர்களுடன் வந்த அவர் ரஞ்சிதாவின் சார்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நித்யானந்தாவின் சீடர் லெனின் கருப்பன், ஆரத்தி ராவ், ஸ்ரீதர் ஆகிய 3 பேர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், ஆபாச படத்தை வெளியிட்டதன் மூலம் அவமானம் ஏற்படுத்தியதாகவும் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நடிகை ரஞ்சிதாவின் மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் இந்த மனு மீதான விசாரணையை வரும் ஜனவரி 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று ரஞ்சிதா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந் நிலையில் நித்யானந்தாவின் பெங்களூர் பிடுதி ஆசிரமத்தைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண் சீடர் சார்பிலும், லெனின் கருப்பனுக்கு எதிராக ராம்நகர் நீதிமன்றத்தில் இன்னொரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவிலும் லெனின் கருப்பன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications