கடந்த ஆண்டைப் போல 2011லிலும் வெற்றிகளைக் குவி்ப்போம்-கருணாநிதி

2011ம் ஆண்டுப் பிறப்பையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
ஆங்கிலப்புத்தாண்டு 2011 புலரும் திருநாள் ஜனவரித் திங்கள் முதல் நாள் உலகம் முழுவதும் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது.
சென்னையில் பிரம்மாண்டமான வடிவில் “தமிழக சட்டப்பேரவை, தலைமைச் செயலக வளாகம்" புதிய கட்டிடம் திறப்பு விழா, உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மகிழ கோவையில், “உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு", சென்னையில், “அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்" திறப்பு விழா, மாமன்னர் ராசராச சோழன் கட்டிய, “தஞ்சைப் பெரியகோவில் 1000 ஆண்டு நிறைவு" விழா,
சென்னையின் மையப்பகுதியில், “செம்மொழிப்பூங்கா" தொடக்க விழா என்பனவாக தமிழர் வரலாற்றில் என்றும் நின்று நிலவிடும் அரிய நிகழ்வுகளை வரலாற்றில் பதித்து விட்ட பெருமிதத்தோடு 2010-ஆம் ஆண்டு நம்மிடம் விடை பெற-வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு கட்டிடயம் கூறியபடி 2011-ஆம் ஆண்டு நம்மை எதிர்நோக்குகிறது.
2006 சட்டப்பேரவைத் தேர்தலின் கதாநாயகன் எனப் பாராட்டி வரவேற்கப்பட்ட தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி; அந்த வாக்குறுதிகளுக்கும் மேலாக 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, சத்துணவுடன் வாரம் 5 முறை முட்டைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, திருமணத் திட்டங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, அவசரகால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம்,
நலமான தமிழகம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், இஸ்லாமியர்க்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு, அருந்ததியர்க்கு 3 சதவீத இட ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகள் நலன் காத்திடத் தனித்துறை, அருந்ததியர் நலவாரியம் உட்பட உழைப்பாளர் குடும்பங்கள் நலம் பெற 33 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்கள் எனப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது இந்த அரசு.
இந்த அடிப்படையில், இந்தப் புத்தாண்டிலும் தொடர்ந்து தொண்டாற்றித் தமிழர் நலம்காத்து, தமிழகத்தின் வளம் பெருக்கி என்றும் வெற்றிகள் குவித்திடுவோம் எனும் உணர்வோடு
தமிழக மக்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டுத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
CM Karunanidhi has wishes TN people on new year 2011. In a statment he said, like past year we will achive more victories in 2011 too. He has also listed out the achievements of the DMK govt.












Click it and Unblock the Notifications