For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹோட்டல்களில் புத்தாண்டுக் கொண்டாடுவதை எதிர்த்து பாரத் சேனா போராட்டம்

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் உள்ள ஹோட்டல்களில் புத்தாண்டையொட்டி நடந்த கொண்டாட்டங்களை எதிர்த்து பாரத் சேனா என்ற இந்து அமைப்பு போராட்டம் நடத்தியது.

பாரத் சேனா என்ற இந்த இந்து அமைப்பின் தொண்டர்கள் சிலர் நட்சத்திர ஹோட்டல்களின் முன்பு கூடி நேற்று போராட்டம் நடத்தின.

இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கூறுகையில், இந்தியக் கலாச்சாரத்துடன் எந்த வகையிலும் சேராதது, சம்பந்தம் இல்லாதது இந்த புத்தாண்டுக் கொண்டாட்டம்.

புத்தாண்டையொட்டி ஹோட்டல்களில் நடனங்கள் ஆடுவதும், மது அருந்துவும் நமது கலாச்சாரத்திற்கு விரோதமானது. பல ஹோட்டல்களில் கேபரே நடனங்களையும் நடத்துகின்றனர். இதை தடுக்கவே இந்தப் போராட்டம் என்றார்.

போராட்டம் நடத்திய 100 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

English summary
The activists of Hindu fundamentalist group 'Bharath Sena' protested outside hotels, which have organised New Year celebration parties, in Coimbatore on Saturday. Carrying banners and flags in their hands, the activists shouted slogans hailing India and its culture. The activists strongly condemned the cabaret dances organised in hotels, saying that it is exploiting the Hindu culture.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X