நான், தங்கபாலு உள்ளிட்ட 7 காங். தலைவர்கள் லோக்சபா தேர்தலில் தோற்க திமுகதான் காரணம்-இளங்கோவன்

சென்னை பெரம்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் 126வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
கொஞ்ச காலமாக காங்கிரஸ் தொண்டர்கள் விரக்தியுடன் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நமக்கு இங்கே அங்கீகாரம், மரியாதை வேண்டும்; மற்றவர்களை போல் தங்கள் பைகளை நிரப்ப நாம் விரும்பவில்லை. தமிழக மக்களை நல்ல நிலைக்கு கொண்டு வர நினைக்கிறோம்.
காங்கிரசுக்கு ஸ்பெக்ட்ரம் தலைவலி யாரால் வந்தது; நம் மீது குற்றசாட்டு வந்தால் உடனே சற்று ஒதுங்கி நில் என, மேலிடம் கட்டளையிடும். எங்களோடு இருந்தால் திருந்துவீர்கள் என, நினைத்து சேர்ந்தோம்; ஆனால் திருத்தவே முடியாது, என்ற நிலையில் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் வேண்டும், மரியாதை வேண்டும், அங்கீகாரம் வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள எல்லா காங்கிரஸாரும் கருதுகின்றனர். தி.மு.க. செய்யும் தவறுகளுக்கெல்லாம் காங்கிரஸ் கட்சி பலிகடா ஆக வேண்டியுள்ளது.
எனவே, தி.மு.க. அணியில் காங்கிரஸ் கட்சி இருக்கக்கூடாது என்பதே பெரும்பாலான காங்கிரஸ்காரர்களின் விருப்பமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்களின் இந்த உணர்வுகளை எல்லாம் நாங்கள் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் சொல்லியிருக்கிறோம்.
ஆகவே, காங்கிரஸ் கட்சி விரைவில் நல்ல முடிவை எடுக்கும். அதன் பிறகு தமிழகத்தில் எங்களது பிரசாரமே வேறு விதமாக இருக்கும்.
நான் காங்கிரஸ் தொண்டன் என்ற முறையில் உண்மையை பேசுகிறேன். என்னை எவரும் தடுக்க முடியாது. சிலர் சூழ்நிலை, பதவி காரணமாக பேச முடியாமல் இருக்கின்றனர். ஆனால், தொண்டர்கள் எண்ணம் மேலிடத்திற்கும் தெரியும். ராகுல் சென்னை வந்த போது, மூத்த அரசியல்வாதியை பார்க்கவில்லை என்ற கோபத்தில், தி.மு.க., பொதுக்கூட்டங்களில் ராகுலையும், சோனியாவையும் திட்டுகின்றனர்.
என்னை வெற்றி பெற வைத்து மத்திய அமைச்சராக்கியது தி.மு.க., என்கின்றனர். நான் ஒப்புக் கொள்கிறேன். தற்போது தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி முதல் அமைச்சர்கள் வரை, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் வரை அனைவரையும் வெற்றி பெற வைத்தது காங்கிரஸ் தான் என்பதை நீங்கள் ஒப்புகொள்வீர்களா?
ஆனால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்னையும், பிரபு, கார்வேந்தன், மணிசங்கர் அய்யர், தங்கபாலு உட்பட ஏழு பேரை தோற்க வைத்தது தி.மு.க., தான். அந்த தேர்தலில் தி.மு.க., வுடன் கூட்டணி வைக்காவிட்டால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்.
தமிழகத்தில் வேளாண்மை துறையில் ஊழல் நடந்துள்ளது. என்னைச் சீண்டினால் அவற்றை வெளியிடுவேன். எனவே, எங்கள் உணர்வுகளை மேலிடத்தில் சொல்லி விட்டோம். இன்னும் 15 நாட்களில் காங்கிரஸ் விழித்துக் கொள்ளும். மேலிட நடவடிக்கை தெரியும் என்றார் இளங்கோவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications