ரயில்வேயில் உள்ள 3592 பணியிடங்களுக்கு தேர்வு-கல்வி தகுதி 10-ம் வகுப்பு
நாகர்கோவில்: தெற்கு ரயில்வேயில் போர்ட்டர், ஹெல்பர் உள்ளிட்ட 3592 பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே ரெக்ரூட்மெண்ட் சார்பில் தெற்கு ரயில்வே மற்றும் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் ஸ்வீப்பர், ஹெல்பர், டிராக்மேன் உள்ளிட்ட 9 விதமான பதவிகளுக்கான ஆள்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது.
ஸ்வீப்பர் கம் போர்ட்டர் 241, டிராக்மேன் 1947 உள்பட தெற்கு ரயில்வேயில் மட்டுமே 3087 பணியிடங்களும், சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் 505 இடங்கள் உள்பட 3592 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.
உடல் திறன் தேர்வு, எழுத்து தேர்வு என்று இரு நிலையில் ஆள்சேர்ப்பு நடக்கிறது. இதில் 389 இடம் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பொது பிரிவுக்கு 18 முதல் 33 வயது வரையும், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 18 முதல் 36 வரையிலும், எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 18 முதல் 38 வரையிலும் வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகப்படியான கல்வி தகுதி உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
முதலில் உடல் திறன் தேர்வும், பின்பு எழுத்து தேர்வும், மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படும். விண்ணப்பப் படிவங்கள் ரயில்வே இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மார்ச் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications