ப.சிதம்பரம் கூட்டிய ஆலோசனை கூட்டம்- சந்திரசேகரராவ் புறக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத் : உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூட்டியுள்ள ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானாவை தனி மாநிலமாக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி ஆய்வு நடத்தி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் அறிக்கை சமர்பித்துள்ளது. இந்த அறிக்கை குறித்து விவாதிக்க ப. சிதம்பரம் வரும் 6-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இதற்கிடையே அறிக்கை முடிவு வெளிவருகையில் ஆந்திராவில் கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளதால் அங்கு 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பது என தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பா.ஜ.க அறிவித்துள்ளன. இது குறித்து சந்திரசேகரராவ் நிருபர்களிடம் கூறியதாவது,

ப.சிதம்பரம் கூட்டியுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியை சேர்ந்த வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கும், அவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருக்கையில் இந்த கூட்டத்தில் கந்து கொண்டால் அதனால் பிரச்சனை தீராது. மாறாக புதுப் பிரச்சனை தான் ஏற்படும். அதனால் தான் இதை புறக்கணிப்பது என்று தீர்மானித்துள்ளோம்.

இந்த அறிக்கை குறித்து விவாதிப்பது என்பது தேவையில்லாத ஒன்று. அறிக்கை விவரத்தை மூடி வைப்பதில் புண்ணியம் இல்லை. அதனால் அதை வரும் 6-ம் தேதி வெளியிட வேண்டும். அறிக்கை விவரத்தை வெளியிடும் முன்பே தெலுங்கானாவில் ராணுவம குவிக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பணிய மாட்டோம் என்றார்.

அரசுக்கு ஆபத்து இல்லை-ரோசய்யா

இதற்கிடையே கிரண் குமார் ரெட்டி அரசுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று முன்னாள் முதல்வர் ரோசய்யா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஆந்திராவில் தற்போது தலைதூக்கியிருக்கும் பிரச்சனையால் கிரண்குமார் ரெட்டி அரசுக்கு எந்த வித ஆபத்தோ, பாதிப்போ இல்லை. காங்கிரஸ் அரசு தனது பதவிக் காலம் முழுவதையும் நல்லபடியாக முடிக்கும். தலைவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் கட்சி காங்கிரஸ். அத்தகைய காங்கிரஸ் அரசுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அனைத்து தலைவர்களும் ஒன்றாக இணைந்து தீர்வு காண முயல்வோம்.

தெலுங்கானா பிரச்சனை குறித்து ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி சமர்பித்துள்ள அறிக்கை என்னவாக இருந்தாலும் மக்கள் பொறுமையை இழக்கக் கூடாது. ஆந்திர அரசு மழை, வெள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளோ உதவிகளை செய்துள்ளது. ஆனால் அரசு போதிய நிதியுதவி அளிக்கவில்லை என்று கூறி இந்த விஷயத்தை தெலுங்கு தேசம் அரசியலாக்க முயன்று வருகிறது.

தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் விவசாயிகளுக்கு என்னவெல்லாம் செய்து கொடுத்தார்கள் என்பதை சற்றே நினைத்து பார்க்க வேண்டும். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு குறித்து வந்துள்ள தீர்ப்பு ஆந்திராவுக்கு எதிராக அமைந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண ஆந்திர அரசு முயற்சி மேற்கொள்ளும் என்றார்.

சமீபத்தில் இவர் ரூ. 200 கோடி நில மோசடி விவகாரத்தில் சிக்கினார். அவர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+