கர்கரே தன்னுடன் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட்டார் திக்விஜய் சிங்
டெல்லி: மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, தன்னுடன் பேசியது தொடர்பான ஆதாரத்தை இன்றுவெளியிட்டார் காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலில் ஹேமந்த் கர்கரே உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், சமீபத்தில் திக்விஜய் சிங் திடீரென, கர்கரே கொல்லப்படுவதற்கு முன்பு தன்னுடன் போனில் பேசினார்.அப்போது இந்து தீவிரவாத அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் கூறினார் என்று கூறியிருந்தார். இதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. கர்கரேவின் மனைவியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஆனால் தனது பேச்சுக்கு உரிய ஆதாரம் இல்லை என்று பின்னர் பல்டி அடித்தார் திக்விஜய் சிங். இந்த நிலையில் தற்போது ஆதாரம் இதோ என்று கூறி அதை இன்று வெளியிட்டுள்ளார்.
2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மாலை தன்னை கர்கரே தொடர்பு கொண்டு பேசியதாக கூறியுள்ளார் திக்விஜய் சிங்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மிகக் கடுமையாக முயன்று பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து இந்த தொலைபேசி அழைப்பு தொடர்பான விவரங்களைப் பெற்றுள்ளேன்.
மகாராஷ்டிர ஏடிஎஸ் அலுவலகத்திலிருந்து, 022-23087336 என்ற எண்ணிலிருந்து என்னைத் தொடர்புக் கொண்டார் கர்கரே.
மாலேகான் வழக்கில் தனக்கு எதிராக பாஜகவும், சிவசேனாவும் தீவிரமாக உள்ளதால், தனக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கர்கரே அப்போது என்னிடம் தெரிவித்தார்.
ஆனால் நான் சொன்னதை யாரும் நம்பவில்லை. மேலும், மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் எனது பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தார். ஆனால் இப்போது ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன். எனவே எனனைக் கண்டித்த அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் சிங்.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications