காமன்வெல்த் போட்டி ஊழல்-கல்மாடியிடம் சிபிஐ கிடுக்கிப் பிடி விசாரணை

கடந்த டிசம்பர் 24ம் தேதி கல்மாடியின் வீடுகளில் நடத்திய சோதனையின்போது பல முக்கிய ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியது. அவற்றை வைத்துக் கொண்டு இன்று கல்மாடியிடம் விசாரணை நடைபெற்றது.
முக்கியமாக க்வீன்ஸ் பேட்டன் ராலியில் நடந்த முறைகேடுகள் குறித்து கல்மாடி விசாரிக்கப்பட்டதாக தெரிகிறது.
திங்கள்கிழமையன்று காமன்வெல்த் போட்டி அலுவலகத்திற்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அங்கு சில அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் க்வீன்ஸ் பேட்டன் ராலி தொடர்பான சில ஆவணங்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களையும் பெற்றுள்ளனர்.
இன்றைய விசாரணையின்போது சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்த உரிமை குறித்தும் கல்மாடியிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
ஏற்கனவே கல்மாடியின் முக்கிய உதவியாளர்களான மனோஜ் போர்டே, பி.கே.ஸ்ரீவத்சவா, ஏ.கே.சின்ஹா ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. காமன்வெல்த் போட்டி நிதி முறைகேடுகள் தொடர்பாக இதுவரை 3 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விசாரணைக்காக இன்று காலை 10 மணிக்கு சிபிஐ தலைமையகத்திற்கு வந்தார் கல்மாடி. அதன் பின்னர் அரை மணி நேரம் கழித்து விசாரணையைத் தொடங்கினர் அதிகாரிகள்.
இன்றைய விசாரணைக்கு மனோஜ் போர்டே, ஸ்ரீவத்சவா, சின்ஹா ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications