போலீஸ் கெடுபிடியால் தவிக்கும் சங்கரன்கோவில் நகை தொழிலாளர்கள்
சங்கரன்கோவில்: போலீசாரின் கெடுபிடியால் சங்கரன்கோவில் நகைத் தொழிலாளர்கள் தொழில் நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களின் குடும்பங்கள் வறுமையில் தவிக்கின்றன.
சங்கரன்கோவில் மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்த பழனி என்பவரை ராஜபாளையம் போலீசார் திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் சங்கரன்கோவில் நேரு தெருவைச் சேர்ந்த செல்வராஜ், பாலமுருகன், மாரியப்பன், மாடசாமி ஆகிய 4 பேரை கடந்த 24-ம் தேதி அதிகாலை ராஜபாளையம் டிஎஸ்பி ராஜகோபால் தலைமையிலான போலீசார் பிடித்து சென்றனர்.
இவர்களை விடுவிக்க வலியுறுத்தி அன்று இரவு சங்கரன்கோவி்ல் மெயி்ன் ரோட்டில் நகை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டது தொடர்பாக கடந்த 25-ம் தேதி நகர காவல் நிலைய போலீசார் 25 பெண்கள் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதி்ல் 30க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற்றனர்.
ராஜபாளையம் போலீசார் பிடித்து சென்ற 4 பேரையும் குறிப்பிட்ட நகையை பறிமுதல் செய்த பின்னர் எவ்வித வழக்கும் இன்றி விடுவித்தனர். இதனால் இப்பிரச்சனை முடிவுக்கு வந்து விடும் என வியாபாரிகளும், தொழிலாளர்களும் கருதிய நிலையில் போலீசார் திடீரென்று சாலை மறியல் செய்த வழக்கில் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட நகை தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாமல் தலைமறைவு வாழ்க்கை நடத்துவதால் 12 நாட்களுக்கு மேலாக அவர்களது குடும்பங்கள் பொருளாதார ரீதியாக சிரமத்தில் உள்ளன. ஏற்கனவே தங்கத்தின் விலையேற்றத்தால் தொழில் வாய்ப்பு குறைந்து சிரமப்பட்டு வரும் நிலையில் தற்போது போலீசாரின் கெடுபிடியால் நகை தொழிலாளர்கள் வாழ்வு கேள்விக்குறியாக உள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications