2011-2012ம் ஆண்டுக்கான தமிழக இடைக்கால பட்ஜெட்: பிப்ரவரி 4ம் தேதி தாக்கல்
சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 4ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் தேர்தல் கால அறிவிப்புகள் ஏராளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நாளை மறுதினம் கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் உரையுடன் கூட்டம் தொடங்கும். ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகமும் பேரவை வளாகமும் அமைந்த பிறகு முதல்முறையாக கவர்னர் புதிய சட்டசபையில் உரைநிகழ்த்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறஉள்ள நிலையில் கவர்னரது உரையில் பல முக்கிய அறிவிப்புகள், புதிய திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அடுத்த நாள் முதல் விவாதம் நடைபெறும்.
ஒருவார காலம் நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் பிப்ரவரி 4ம் தேதி இந்த 13வது சட்டமன்றத்தின் கடைசி கூட்டத் தொடர் தொடங்கும்.
சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால், 2011- 2012ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 4ம் தேதி தாக்கல் செய்யப்படும்.
நிதியமைச்சர் அன்பழகன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். வழக்கமாக ஆண்டுதோறும் நிதிநிலை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் மே மாதம் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பிப்ரவரி 11ம் தேதி 2011-2012ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2010-11ம் ஆண்டுக்கான இறுதி துணை பட்ஜெட் அறிக்கையும் தாக்கல் செய்யப்படும்.
அத்துடன் பட்ஜெட் கூட்டத் தொடர்மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.
சட்டசபை தேர்தலுக்கு பின் புதிய அரசு பொறுப்பேற்றதும் 2011-2012ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications