தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி முடிவு: ஜி. ராமகிருஷ்ணன் அறிவிப்பு
திண்டுக்கல் : தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறி்த்து முடிவு செய்யப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது,
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பும் ஒரு வகை ஊழல் தான்.
மக்கள் நலன் கருதி இலவச கலர் டி.வி, உர மானியம், ஒரு கிலோ அரிசி ஆகியவை கொடுக்கும் போது அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இது ஊழலாகுமா என தி.மு.க-திமுகவினர் பிரசாரம் செய்கிறார்கள். இது பொய் பிரச்சாராமாகும்.
இந்தியாவில் இது வரை நடந்திராத ஊழல் இது. முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை காப்பாற்ற தி.மு.க தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. விரைவில் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தில் இப்பிரச்னை குறித்து சிபிம் விவாதிக்கும்.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 3 லட்சம் பேருக்குத் தான் இந்தாண்டு வீடு வழங்கப்பட உள்ளது. ஆனால் 21 லட்சம் பேருக்கு திமுகவினர் அடையாள அட்டை வழங்கி வருகின்றனர்.
தேர்தலின் போது மக்கள் தி.மு.க-விற்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, அடுத்த ஆண்டு வீடு கட்டுவதற்கு இந்தாண்டே அடையாள அட்டையை தி.மு.க-வினர் வழங்கி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கதாகும்.
தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். அதிவும் மாநிலக்குழு கூடி இறுதி முடிவெடுக்கும் என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications