டெல்லி: காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடியின் உதவியாளர்கள் வீடுகளில் இன்று சிபிஐ மீண்டும்சோதனை நடத்தியுள்ளது. மேலும் காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக நான்காவது வழக்கையும் சிபிஐ பதிவு செய்துள்ளது.
நேற்று சுரேஷ் கல்மாடியிடம் கிட்டத்தட்ட 9 மணி நேரம் விசாரணை நடந்தது. இதில் பல கேள்விகளுக்கு அவர் சரியான பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. நழுவலான, மழுப்பலான பதிலையே அவர் கூறியுள்ளார். நேரடி பதிலை அவர் தரவில்லை.. இதனால் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள 10 இடங்களில் இன்று அதிகாலையில், சிபிஐ திடீர் ரெய்டில் குதித்தது. இவை அனைத்தும் கல்மாடியின் உதவியாளர்களின் வீடுகள் ஆகும்.
இதற்கிடையே காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக நான்காவது வழக்கைப் பதிவு செய்துள்ளது சிபிஐ. நான்கு நிறுவனங்களுக்கு கான்டிராக்ட் தரப்பட்டது தொடர்பான நிதி முறைகேடு தொடர்பாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கான்டிராக்டுகளின் மொத்த அளவு ரூ. 600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நடந்த ரெய்டுகளும் கூட இந்த நான்கு நிறுவனங்கள் தொடர்பான முக்கியத் தகவல்களைக் கண்டுபிடிக்கத்தான் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே க்வீன்ஸ் பேட்டன் ரிலே மோசடி தொடர்பாக 2 வழக்குகளையும், கான்டிராக்டுகள் தொடர்பாக ஒரு வழக்கும் என மூன்று வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The CBI today raided about 10 premises in the National Capital Region after it registered a fresh FIR in connection with its probe into the alleged multi-crore Commonwealth Games overlays scam. The raids come a day after the agency questioned Commonwealth Games Organising Committee chief Suresh Kalmadi. Official sources said the CBI registered the FIR, the fourth in the case, yesterday in connection with the overlays contracts given out to four firms. The total value of these contracts was over Rs 600 crore. The sources said the CBI raids started early in the morning and are focussed on four companies, which had acted as the Indian arm for the same number of international firms.The contracts were bagged by consortium of foreign and Indian firms.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.