மிஷல் ஒபாமா 2 மாத கர்ப்பம்-பரிசோதித்த டாக்டர் தகவல்

இதற்கிடையே, இந்த செய்தியை மீடியாக்களுக்கு லீக் செய்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ் மீது ஒபாமா தம்பதியினர் கடும் கோபமடைந்துள்ளனர். இதையடுத்து கிப்ஸ் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதிபர் ஒபாமா-மிஷல் தம்பதிக்கு மலியா மற்றும் நதாஷா என்கிற சாஷா என இரு குழந்தைகள் உள்ளனர். மலியா 1999ம் ஆண்டும், சாஷா 2001ம் ஆண்டும் பிறந்தனர்.
தற்போது மிஷலுக்கு 46 வயதாகிறது. ஒபாமாவுக்கு 49 வயதாகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் அவருக்கு 50 வயது பிறக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது முறையாக மிஷல் கர்ப்பமாகி இருப்பதாக மீடியாக்களில் செய்தி பரவியது.
இது உண்மையா அல்லது வதந்தியா என்ற விவாதம் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரபரப்பாக எழுந்தது.
புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது மிஷல், ஒபாமா இருவரும் காணப்படவில்லை. இதை வைத்து அவர் கர்ப்பமாக இருக்கலாம் என்று தகவல் பரவியது.
இந்த நிலையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரான ராபர்ட் கிப்ஸ், மிஷல் கர்ப்பமாக இருக்கலாம் என்று சில மீடியாக்களுக்குத் தெரிவித்தார். இதையடுத்து இந்த செய்தி படு வேகமாக பரவியது.
இதைப் பார்த்து ஒபாமா தம்பதி அதிர்ச்சி அடைந்தது. கிப்ஸைக் கூப்பிட்டு அவர்கள் கடுமையாக கண்டித்தனராம். இதையடுத்து தனது செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கிப்ஸ் அறிவித்துள்ளார்.
சரி, மிஷல் விவகாரத்திற்கு வருவோம்.
மிஷல் ஒபாமா கர்ப்பமாக இருப்பதை இதுவரை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, இதுதொடர்பான செய்திகளுக்கும் அது பதிலளிக்கவில்லை. ஆனால் மிஷலின் டாக்டர் இதை உறுதிப்படுத்தியுள்ளார். அவருக்கு பரிசோதனைகள் செய்த டாக்டர் மிக்கேல் அலசான்ட்ரோ கூறுகையில், மிஷல் கர்ப்பமாக உள்ளார். 2 மாத கர்ப்பமாக அவர் உள்ளார். உடல் நலம் நன்றாக உள்ளது. அவரது வயிற்றில் ஆண் குழந்தை வளருகிறது. அதுவும் பூரண நலத்துடன் உள்ளது. வருகிற ஜூலை மாத இறுதியில் குழந்தை பிறக்கலாம் என்று கருதுகிறோம் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே கிப்ஸுக்குப் பதில் புதிய செய்தித் தொடர்பாளராக ஜோனல் மார்க்கம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
39 வயதாகும் கிப்ஸ் வடக்கு காரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஒபாமாவிடம் பணியாற்றுகிறார். ஒபாமாவின் நெருக்கமானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். ஆனால் அவரது லூஸ் டாக்கினால் இப்போது ஒபாமாவின் நட்பை, குறிப்பாக, மிஷலின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டு விட்டார். இதுவே அவரது பறி போக முக்கியக் காரணம்.
கிப்ஸ் குறித்து ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், கிப்ஸ் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். எனது சிறந்த ஆலோசகர்கலில் ஒருவர். ஆனால், அவருக்கு தற்காலிகமாக சிந்தனை மட்டுப்படும் (மிஷல் விவகாரத்தைக் குறிப்பிடுகிறார்) என்று நான் எதிர்பார்க்கவில்லை. சரியான கோணத்தில் அவர் சிந்திக்கத் தவறி விட்டார் என்று கூறியுள்ளார் ஒபாமா.
ஏற்னவே கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி, மிஷலுக்கு 2011ம் ஆண்டு இரட்டைக் குழந்தை பிறக்கும் என ஏற்கனவே கணித்துக் கூறியபோது பரபரப்பாக அது பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது உண்மையிலேயே மிஷல் கர்ப்பமாகியுள்ளார் என்ற செய்தி அமெரிக்காவை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒருவர் பதவியில் இருக்கும் போது அவரது மனைவிக்கு குழந்தை பிறப்பது அமெரிக்க வரலாற்றில் 2வது முறையாக இருக்கும். கடைசியாக 1963ம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜான் கென்னடியின் மனைவி ஜாக்குலின் போவியர் கென்னடிக்கு பாட்ரிக் என்ற குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த 2 நாட்களிலேயே அது இறந்து போனது என்பது நினைவிருக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications