எம்.ஜி.ஆர். பிறந்த நாள் 4 நாட்கள் கொண்டாடப்படும்: ஜெ. அறிவிப்பு
மதுரை: அதிமுக நிறுவனர் டாக்டர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கொண்டாடப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர், பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 94-வது பிறந்த நாள் வரும் 17-ம் தேதி வருகிறது. எனவே, அவரது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் கழக அன்டை மாநிலங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.
அந்த 4 நாட்களும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
பொதுக் கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் அதிமுக முக்கிய நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகிய இடங்களில் 17-ம் தேதி அன்று புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications