சபரிமலையில் போலீசார் அராஜகம்: பக்தர்கள் மீது தடியடி
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களை போலீசார் தடியால் அடித்து காயப்படு்த்துவதாக புகார்கள் வந்துள்ளன.
சபரி்மலை ஐயப்பன் கோவிலில் வரலாறு காணாத கூட்டம் காணப்படுகிறது. 3 தினங்களுக்கு முன் பம்பையி்ல் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 1 பக்தர் உயிரிழந்தார். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் தேவசம்போர்டின் கணக்கு தணிக்கை விபரம் கேரள உயர்நீதி மன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், பவதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், பம்பையில் நெரிசல் ஏற்பட்டு பக்தர் பலியான விபரம் குறித்து விசாரித்தது. தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், சபரிமலையில நெரிசலால் விபத்து ஏற்படாமல் தவிர்க்க தேவையான நடவடிக்கையை போலீசும், தேவசம் போர்டும் எடுக்க வேண்டும்.
தடுப்பு வேலி அமைக்கும்போது அதை போலீஸ் உயரதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். பக்தர்களுக்கு எவ்விதத்திலும் சிரமம் கொடுக்கவோ, தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிக்கவோ கூடாது என்று உத்தரவிட்டனர். சபரிமலையி்ல் பக்தர்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் என்று புகார்கள் எழுந்துள்ளன. சில தினங்களுக்கு முன் கேரள பக்தர்களை போலீசார் தடியால் அடித்துள்ளனர்.
இது தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்தி 3 போலீசாரை வேறு பணிக்கு மாற்றியுள்ளனர். இரு தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் இருந்து 12 பேர் அடங்கிய குழுவை மரகூட்டம் பகுதியி்ல் போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஐயப்பனை தரிசிக்க முடியாமல் இருமுடி கட்டுகளை பம்பை ஆற்றிலேயே விட்டு விட்டு அவர்கள் ஊர் திரும்பினர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த பக்தர்கள் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள டிஜிபி மற்றும் தேவசம்போர்டு அமைச்சரிடம் புகார் அளித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications