2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: நாட்டுக்கு நஷ்டமே ஏற்படவில்லை-கபில் சிபல்

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், நாட்டின் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (Comptroller and Auditor General-CAG) உள்பட அனைத்துத் துறைகளையும் காங்கிரசும் அரசும் மதிக்கிறது. இதை காங்கிரசின் வரலாற்றைப் பார்த்தாலே புரியும். எந்த அரசுத் துறையையும் காங்கிரஸ் குறை கூறியதே இல்லை.
அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரி கூறியுள்ள சில தகவல்கள் வலியைத் தருகின்றன. 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக அவர் எந்தக் கணக்கின் அடிப்படையில் கூறியுள்ளார் என்று தெரியவில்லை.
சில தவறான கணக்கீட்டு முறைகளைப் பின்பற்றி இந்தக் கணக்குக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். இதில் ஏராளமான பிழைகளும் தவறுகளும் உள்ளன. எந்த அடிப்படையும் இல்லாத இந்தக் கணக்கை ஏற்கவே முடியாது.
ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுவது பெரும் பரபரப்பை உண்டாக்க வேண்டுமானால் உதவலாம். ஆனால், இந்த எண்ணிக்கையை தணிக்கைத் துறை எப்படி எட்டியது என்பதைப் பார்க்க வேண்டும். அதைப் பார்த்தால் அதில் பெருமளவில் தவறுகள் இருப்பது புரியும்.
ரூ. 1.76 லட்சம் கோடி என்றெல்லாம் சொன்னால், அந்த நஷ்டத்துக்கு காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த வகையிலும் பொறுப்பல்ல.
உண்மையைச் சொன்னால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறான நடைமுறைகள் ஆரம்பித்தது பாஜக கூட்டணி ஆட்சியில் தான். அவர்கள் தான் 'முதலில் வருபவர்களுக்கு முதலில்' ("first come, first served" policy ) என்ற கொள்கையை ஆரம்பித்து, அதை நடைமுறைப்படுத்தியவர்கள்.
இந்த உண்மைகளை எல்லாம் நாங்கள் வெளிப்படுத்துவோம் என்று பயந்து தான், நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் பாஜக முடக்கியது.
தணிக்கைத் துறையைப் பொறுத்தவரை அவர்கள் தங்களுக்குத் தாங்கள் அநீதியை செய்து கொண்டுள்ளனர். பாஜகவும் எதிர்க் கட்சிகளும் மக்களுக்கு அநீதியைச் செய்கின்றன என்றார்.
2010ம் ஆண்டு 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் கிடைத்த வருமானத்துடன் 2007-08ம் ஆண்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் கிடைத்த வருமானத்தை ஒப்பிட்டு நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக கணக்குக் தணிக்கை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications