டெல்லியில் கிலோ வெங்காயம் ரூ.35: ரேஷன் கடைகளில் விற்க அரசு ஏற்பாடு!
டெல்லி: வெங்காய விலையை சாதாரண நிலைக்குக் கொண்டுவர, டெல்லியில் கூட்டுறவு கடைகள் மூலம் வெங்காயம் ரூ.35-க்கு விற்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.
வெங்காயத்தை சமயலில் பயன்படுத்துவதை தவிர்க்கும் அளவுக்கு வெங்காயத்தின் விலை எகிறிவிட்டது. கிலோ வெங்காயம் ரூ.60லிருந்து 75 வரை விற்கப்பட்டு வருகிறது. டெல்லியில் கூட்டுறவு கடைகளில் மார்க்கெட் விலையைவிட 50 சதவீதம் குறைத்து கிலோ ரூ.35க்கு விற்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
விவசாய கூட்டுறவு, நிறுவனங்களான நாபெட் என்.சி. சி.எப் ஆகியவை மார்க்கெட் விலையை விட குறைத்து விற்பதால் அந்த ஏஜென்சிகளுக்கு 30 சதவீத இழப்பு ஏற்படுகிறது. டெல்லியில் பொது மார்க்கெட்டுகளில் வெங்காயம் ரூ.50லிருந்து 60 வரை விற்கப்படுகிறது. கூட்டுறவு கடைகளில் தினந்தோறும் 50 முதல் 100 டன் வெங்காயம் விற்கப்படுகிறது.
நடமாடும் வாகனங்களிலும் பொது மக்கள் சிரமமின்றி வெங்காயம் வாங்க ஏற்பாடு செய்துள்ளது.
வெங்காயத்தை தள்ளுபடி விலையில் விற்பதால் டெல்லி கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட மாதம் ரூ.5 கோடி நிதியை மத்திய அரசு வழங்குகிறது.












Click it and Unblock the Notifications