சீமானை சந்திக்கிறார் வைகோ-அதிமுக கூட்டணிக்கு இழுக்க முயற்சி?

Subscribe to Oneindia Tamil

Vaiko and Seeman
சென்னை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசவுள்ளார். சீமானை அதிமுக கூட்டணிக்குக் கொண்டு வருவதற்காகவே வைகோ அவரை சந்திக்கவுள்ளதாக பேச்சு கிளம்பியுள்ளது.

ஈழத்தில் போர் முடிவடைந்த கால கட்டத்தில் நாம் தமிழர் அமைப்பை உருவாக்கி தீவிரமாக ஈழ ஆதரவுப் போராட்டங்களை தொடங்கினார் சீமான். பின்னர் இதை அரசியல் கட்சியாகவும் மாற்றினார். வரும் சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளார். முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தான் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் 2வது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகி விடுதலையான பின்னர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாளை காலை பத்தரை மணியளவில் சீமானை, வைகோ சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சீமானை அதிமுக கூட்டணிக்கு இழுக்க ஜெயலலிதா முயல்கிறாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும், சீமானை கருணாநிதிக்கு எதிராக பொது வேட்பாளராக்கவும் அதிமுக முயல்கிறதோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+