காரைக்கால் அதிமுக செயலாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
காரைக்கால்: காரைக்கால் அதிமுக நகரச் செயலாளர் வீடு மீது இன்று அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் அதிமுக நகரச் செயலாளராக இருப்பவர் ஜெ.வி.ஜெயபால். இன்று அதிகாலை 2 மணி அளவில் அவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.
இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் முதலியவை சேதமடைந்தன. ஆனால் அவரது குடும்பத்தினர் பத்திரமாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஜெயபால் இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவரது புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஜெயபால் வீடு முன்பு குவிந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications