தி.மு.க-வை எதிர்க்கும் கட்சிகளுடன் கூட்டணி-பொன்.ராதாகிருஷ்ணன்
ஊட்டி: தி.மு.க. -வை எதிர்க்கும் கட்சிகளுடன் தான் பாரதிய ஜனதா கூட்டணி அமைக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் தாமரை ரத யாத்திரை நடைபெற்று வருகின்றது.
இந்த ரத யாத்திரை ஊட்டி வந்தது. அப்போது பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழ்நாடு முழுவதும் சமூகநீதி, சமநீதி கேட்டு மக்களிடையே பாரதிய ஜனதா கட்சி தாமரை ரத யாத்திரை பிரசாரம் செய்து வருகிறது.
முஸ்லிம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் மத்திய அரசு இந்து ஏழை குழந்தைகளுக்கு வழங்க முன்வருவதில்லை. இது குறித்து மக்களிடையே விழுப்புணர்வு ஏற்படுத்தவே இந்த ரத யாத்திரை.
இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய இழப்பு என்றால் அது ஸ்பெக்ட்ரம் இழப்பு தான். மத்திய அரசுக்கு ஸ்பெக்ரம் விவகாரத்தில் ரூ. 1. 176 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இழப்பிற்கு காரணம் அறிய பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தையும் மக்களிடம் கொண்டு சென்றுள்ளோம்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் பர்னாலா ஆற்றிய உரை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை எதிர்க்கும் கட்சிகளுடன் தான் பாஜக கூட்டணி வைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications