தமிழக அரசை கண்டித்து 11ல் சேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் கண்டன உண்ணாவிரதம்
சேலம்: பால் கொள்முதல் விலையை குறைத்து அறிவித்த தமிழக அரசைக் கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் சேலத்தில் நாளை கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருக்கின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. முகமது அலி, பொதுச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி ஆகியோர் கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 4-ம்தேதி அன்று தமிழக முதலமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் சார்பில் பசும்பாலுக்கு ரூ. 5 ம், எருமைப்பாலுக்கு ரூ. 8 ம் கொள்முதல் விலை உயர்வு கோரினர்.இதனை முதல்வருடன் கலந்து பேசி தெரிவிப்பதாகத் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்த நிலையில் கடந்த 5- ம் தேதி தமிழக அரசு தன்னிச்சையாக பசும்பாலுக்கு ரூ. 1.10 ம், எருமைப்பாலுக்கு ரூ. 2.20 ம் அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கமும், பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கமும் இணைந்து தமிழக அரசை கண்டித்து ஆரம்ப சங்கங்கள் முன்பு கருப்புக் கொடி ஏற்றுவது என்றும், வரும் 11-ம் தேதி அன்று சேலம் பால் பண்ணை முன்பு மாநிலம் தழுவிய கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications