தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கத்தில் ஒரே நேரத்தில் தேர்தல்-ஆணையம்

தேர்தலில் சீர் திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்தில் பேசிய குரேஷி கூறுகையில்,
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேங்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும். இந்த 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும்.
தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளின் சார்பில் வாக்காளர் சீட்டுகள் கொடுக்கின்றன. அப்போது அன்பளிப்புகளும், பணமும் கூட கொடுக்கப்படுகின்றன. இதைத் தடுக்க தேர்தல் கமிஷனே பொது மக்களுக்கு தேர்தல் கமிஷனின் சின்னம் பொறிக்கப்பட்ட வாக்காளர் சீட்டு கொடுக்க முடிவு செய்துள்ளது.
பிகாரில் சட்டசபை தேர்தல் நடந்தபோது, இதுபோன்ற தேர்தல் கமிஷனின் சின்னம் பொறிக்கப்பட்ட வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டது. அதே போல இந்த மாநிலங்களிலும் வழங்கப்படும்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு தேர்தல் கமிஷன் ஏற்கனவே தடை விதித்துள்ளது. அதேபோல தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளுக்கும் தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்போதே இந்த கருத்துக் கணிப்புக்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்தியாவில் 1,200 அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றில் 150 கட்சிகள்தான் செயல்படுகின்றன. மீதி உள்ள கட்சிகளில் பெரும்பாலானவை போலி கட்சிகள். இந்தக் கட்சிகளின் அங்கீரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு வேண்டும்.
தேர்தலின்போது பணம் விளையாடுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அதேபோல கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடுத்தாக வேண்டும். தேர்தலில் முறைகேடு செய்யும் வேட்பாளர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த தண்டனை காலத்தை 5 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும்.
வேட்பாளர்களுக்கு அரசாங்கமே தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. தேர்தல் கமிஷனுக்கு இதில் உடன்பாடு இல்லை. இதை தேர்தல் கமிஷன் எதிர்க்கிறது. வேட்பாளர்களுக்கு அரசே செலவு செய்ய பணம் கொடுத்தால், அரசியல் கட்சிகள் மேலும் பணம் பெற்று, அதிக அளவில் முறைகேடுகளில் ஈடுபட உதவியது போலாகி விடும் என்றார் குரேஷி.
பின்னர் நிருபர்களிடம் பேசிய குரேஷி, மேற்கு வங்க மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமை கவலை அளிக்கிறது. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகள் ஆயுத முகாம்கள் அமைத்து செயல்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு வந்தன.
அது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம். தீவிர சோதனைகள் நடத்தி ஆயுதங்களையும், கள்ளச் சாராயத்தையும் பறிமுதல் செய்யுமாறும், ஆயுத முகாம்களை அழிக்குமாறும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து சமூக விரோதிகளை கைது செய்யும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications