இன்னும் குறையாத வெங்காய விலை-மக்கள் அவதி தொடர்கிறது

வெங்காயத்தை உரிக்கும்போதுதான் கண்ணில் ஜலம் வரும். ஆனால் இன்றோ வெங்காயத்தைப் பார்த்தாலே கண்ணீர் பெருகிறது. அப்படி இருக்கிறது வெங்காயத்தின் விலை. இளகிய மனம் படைத்தவர்கள் மார்க்கெட் பக்கம் காய்கறி வாங்கப் போனால் மாரடைப்பு வராத குறை. அப்படி இருக்கிறது விலைகள் அனைத்தும்.
இந்தக்காய்தான் என்றில்லை, எந்தக் காயைத் தொட்டாலும் கடுமையாக இருக்கிறது விலைவாசி. ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை குறைந்தபட்சம் ரூ. 50 முதல் 70 வரை விற்கிறது. மொத்த மார்க்கெட்டான கோயம்பேட்டில் கொஞ்சம் குறைவாக இருக்கும் என்று நினைத்துப் போனால் அங்கும் ரூ. 40 வரை விற்கிறார்கள்.
என்ன பிரச்சினை என்றால் சில்லறை விலைக்கு விற்கும் வியாபாரிகள்தான் இஷ்டத்திற்கு விலை வைத்து மக்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். ஓரளவுக்கு கூட வைத்து விற்றால் பரவாயில்லை. ரூ. 20 முதல் 40 வரை அதிகம் வைத்து அவர்கள் விற்பதால்தான் மக்களுக்குப் பெரும் அவஸ்தையாகியுள்ளது.
இப்படி விலைவாசி கடுமையாக இருப்பதால் மக்கள் எந்தக் காயை வாங்குவதாக இருந்தாலும் அதிகபட்சம் கால்கிலோ வரை மட்டுமே வாங்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் சிலரோ, 100 கிராம் போதும்ப்பா என்று கூறுவதையும் கேட்க முடிகிறது.
தற்போதைய நிலையில் கோயம்பேடு மார்க்கெட் நிலவரப்படி பீன்ஸ் கிலோ ரூ. 25, அவரைக் காய் கிலோ ரூ. 32, பெங்களூர் தக்காளி கிலோ ரூ. 16, உருளைக்கிழங்கு ரூ. 13, பீட்ரூட் ரூ. 12, முள்ளங்கி ரூ. 8, பச்சை மிளகாய் ரூ. 15 என்று விற்கப்படுகிறது. இதை விட குறைந்தது ரூ. 5 முதல் 30 வரை சில்லறைக் கடைகளில் விற்கிறார்கள்.
என்று தணியுமோ இந்த வெங்காய சோகம்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications